பொழுதுபோக்கு

ரோஹிணி தியேட்டர் சர்ச்சைக்கு தந்திரமாக முற்றுப்புள்ளி வைத்தார் விஜய்..

லியோ ட்ரெய்லரை காண்பிக்க ஏற்பாடு செய்த சென்னையின் மிகவும் பழமை வாய்ந்த ரோகிணி தியேட்டரில் நூற்றுக்கணக்கான இருக்கைகள் அடித்து நொறுக்கப்பட்டன.

ஏற்கனவே லியோ டிரைலரை ரோகிணி தியேட்டரில் வெளியில் திரை கட்டி காண்பிக்க செய்யப்பட்ட ஏற்பாடுகள் எல்லாம் காவல்துறையின் கட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்டது.

இதற்கு பதிலாக ரோகிணி திரையரங்கம் தியேட்டரின் உள்ளே ட்ரெய்லரை காண்பிக்க ஏற்பாடு செய்தது. கூட்டத்தை பார்த்து கதிகலங்கி போன தியேட்டர் ஓனர் பத்து ரூபாய் டிக்கெட் என்று சொன்னால் கூட்டம் குறைந்துவிடும் என எண்ணி அதற்கும் ஏற்பாடு செய்தார். இருந்தாலும் பத்து ரூபாய் தான என முண்டியடித்துக் கொண்டு டிக்கெட் வாங்கி ரசிகர்கள் உள்ளே புகுந்து ஆரவாரம் செய்தனர்.

இதன் எதிரொலியாக இருக்கைகள் சூறையாடப்பட்டன. ஆனால் திரையரங்கம் இதற்கு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கவில்லை. இன்சூரன்ஸ் கூட கிளைம் செய்யவில்லை. எப்படி பார்த்தாலும் கிட்டத்தட்ட லட்சக்கணக்கில் செலவுகள் இருக்கும், இதை எப்படி சமாளிக்க போகிறார் என்பதை யோசிக்கும் வேளையில் இதுதான் நடந்திருக்கும் என ஒரு செய்தி வெளிவந்தது.

திரையரங்கு உரிமையாளருக்கு விஜய் தரப்பிலிருந்து போன் செய்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.இப்படி நடந்ததற்கு நஷ்ட ஈடாக பத்து லட்ச ரூபாய் செக் கை மாறி இருக்கிறது.

அதனால் தான் ரோகிணி தியேட்டர் தரப்பில் இருந்து எந்த ஒரு இன்சூரன்ஸும் , கம்பிளைன்ட்டும் செய்யவில்லை. பிரச்சனையை நஷ்ட ஈடோடூ முடித்துக் கொண்டனர்.

இவ்வளவு செய்யும் விஜய், தனது ரசிகர்களுக்கு எந்த ஒரு எதிர்வினை கருத்துக்களும் தெரிவிக்கவில்லை என்பது பெரும் வருத்தம் அளிக்கிறது. இதனால் தான் அஜித் குமார் எந்த ஒரு ரசிகர் மன்றமும் வேண்டாம் என ஒதுங்கி இருக்கிறார்.

லியோ ட்ரெய்லர் வெளி வந்ததற்கு இவ்வளவு பிரச்சனைகளை செய்துள்ளனர்.இதில் அதிகாலை காட்சிக்கு அனுமதித்தால் தியேட்டர்களுக்கு தான் பிரச்சனை.

(Visited 6 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்