இத்தாலியில் லெஸ்பியன் தாயின் பெயரை நீக்க கோரிக்கை : வலுத்த எதிர்ப்பு!
இத்தாலியில் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் இருந்து லெஸ்பியன் தாயின் பெயரை நீக்குவதற்கான வழக்கறிஞரின் அழைப்புக்கு இத்தாலிய பெண்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
லெஸ்பியன் தம்பதிகளுக்குப் பிறந்த 33 குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்கள் சட்டப்பூர்வமானது அல்ல என்று வடக்கு இத்தாலிய நகரத்தில் அரசு வழக்கறிஞர் ஒருவர் கூறியதை அடுத்து, சுமார் 300 பெண்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர்.
இதன்போது நாம் அனைவரும் ஒன்றுதான் என்று உங்கள் ஆசிரியர் உங்களுக்கு கற்பிக்கவில்லையா என்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.
முதலில், ஆகஸ்ட் 2017 இல் நகராட்சியால் பதிவு செய்யப்பட்ட இரண்டு தாய்மார்களைக் கொண்ட குழந்தையின் பிறப்புச் சான்றிதழின் சட்டப்பூர்வ தன்மை குறித்து அரசு வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வழக்கு வரும் நவம்பரில் விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.