இலங்கையில் ஊழலில் ஈடுபட்டவர்களின் வேட்புமனு நிராகரிப்பு?

இலங்கையில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளோருக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பு மனுவை வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 12 இயக்கம் அரசியல் கட்சிகளிடம் இதனை கோரியுள்ளது.
அதன் இணைப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
உரிய வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் பட்டியலில் இணைக்காவிட்டால், மக்களுக்குச் சிறந்த அரசியல் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லாமல் போகும்.
ஊழல், குற்றங்கள் மற்றும் சுற்றாடலுக்குத் தீங்கு விளைவித்த உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் அனுமதிக்கக் கூடாது.
எனவே, அரசியல் கட்சிகள் தமது பொறுப்பை உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும் என ரோஹண ஹெட்டியாராச்சி வலியுறுத்தியுள்ளார்.