ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் : தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக நடேஷன் தாக்கல் செய்த மேல்முறையீடு நிராகரிப்பு!
ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்திருந்த போரிஸ் நடேஷனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவித்திருந்தார். அதன்படி இன்றைய தினம் (15.02) அவர் மேல் முறையீடு செய்திருந்தார். இருப்பினும் அவருடைய மேல் முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து அவர் செய்த மற்றொரு மேல்முறையீட்டை நீதிமன்றம் இன்னும் பரிசீலிக்கவில்லை.
நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் நடேஷ்டினின் வேட்புமனுவை ஆதரித்து மனுக்களில் கையெழுத்திட்டனர். 105,000 கையெழுத்துக்களை அவர் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்திருந்தார்.
நடேஷ்டினின் பிரச்சாரத்தால் சமர்ப்பிக்கப்பட்ட 9,000 க்கும் மேற்பட்ட கையொப்பங்கள் செல்லாது என்று ஆணையம் கடந்த வாரம் சுட்டிக்காட்டி தகுதி நீக்கம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.