ஐரோப்பா செல்லும் கனவில் கடத்தல்காரர்களின் பிடியில் சிக்கிய அகதிகள் : அடித்து துன்புறுத்தப்பட்ட கொடூரம்!
கிரீஸ் தீவில் தனது பெற்றோருடன் பல நாட்களாக தண்ணீரின்றி தவித்த புதிதாகப் பிறந்த குழந்தையை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
50 நாட்களுக்கு முன்பு பிறந்ததாக நம்பப்படும் ஆண் குழந்தையொன்று, குடிநீர் இன்றி தவித்துள்ளது. அவருடைய பாலை தயாரிப்பதற்கு கடல் நீரை பெற்றோர் பயன்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த குடும்பமும், அவர்களுடன் இருந்த பிற அகதிகளும் தற்போது மீட்பு குழுக்களால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவினர் ஐரோப்பாவின் முக்கிய நாடுகளுக்குள் நுழைவதற்காக கடத்தல் காரர்களிடம் உதவிகோரிய நிலையில், பல்வேறு துன்பங்களை அனுபவித்து வந்துள்ளனர்.
குறிப்பாக கடத்தல் காரர்கள் பெருமளவு பணத்தினை பெற்றுக்கொண்டு படகுகளில் ஏறுவதற்காக அவர்களை அடித்து துன்புறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 2 times, 1 visits today)