இலங்கை

இலங்கை: சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு: லங்கா சதொச வெளியிட்ட அறிவிப்பு

பல்வேறு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி சம்பா அரிசி, கொண்டைக்கடலை, சீனி, செத்தல் மிளகாய், டின் மீன், பச்சை பட்டாணி உள்ளிட்ட நுகர்வுப் பொருட்களின் விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, டின் மீன் ஒன்று 75 ரூபாவினால் குறைக்கப்பட்டு 500 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு 780 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோ பாசிப்பயறு 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு 890 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ வெங்காயம் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 470 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோ நெத்தலி 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு 925 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ கடலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டு 439 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோ சம்பா அரிசி 4 ரூபாவினால் குறைக்கப்பட்டு 226 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ வெள்ளை சீனி 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு 242 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!