செய்தி விளையாட்டு

சாதனை படைத்த விஷ்மி குணரத்ன

18 வயதான விஷ்மி குணரத்ன தனது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தனது முதல் சதத்தை இன்று (16) பதிவு செய்து சாதனை படைத்தார்.

பெல்ஃபாஸ்டில் அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 260 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது

இலங்கை அணி சார்பில் விஷ்மி குணரத்ன அதிகபட்சமாக 101 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

 

இதுவரை இலங்கை மகளிர் அணிக்காக சமரி அத்தபத்து மாத்திரமே சதங்களை பெற்றுக் கொண்டுத்திருந்தார்.

 

இந்நிலையில், சமரிக்கு அடுத்ததாக இலங்கை மகளிர் அணிக்காக சதமடித்த இரண்டாவது பெண் என்ற சாதனையை விஷ்மி படைத்துள்ளார்.

 

மேலும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சதம் அடித்த இளம் இலங்கை வீராங்கனை என்ற சாதனையையும் விஷ்மி படைத்துள்ளார்.

(Visited 58 times, 2 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!