இலங்கையின் பலப் பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை!
இலங்கையின் பலப்பகுதிகளில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இதன்படி தென் மாகாணத்திலும் களுத்துறை மாவட்டத்திலும் இன்று (15.09) அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுகளில் 40-45 கி.மீ அளவில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்த்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.