கனமழையால் பாதிக்கப்பட்ட 84 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.112 கோடி நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மற்றும் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 111 கோடியே 96 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் அரியலூர், கடலூர், நாகை உள்ளிட்ட 33 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 85 ஆயிரம் விவசாயிகள் பயனடைவார்கள். நெல் உள்ளிட்ட இறவைப்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட 1.39 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கான இந்த நிவாரணத் தொகை, விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.





