உக்ரேனை அடுத்து பல நாடுகள் மீது தாக்குதல் நடத்த தயாராகும் புட்டின்!
உக்ரைனுக்கு அடுத்தபடியாக, மால்டோவா மற்றும் பால்டிக் நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் என்று பெல்ஜிய ராணுவத் தலைவர் Michel Hofman, எச்சரித்துள்ளார்.
ரஷ்யா அடுத்து தெற்கேயுள்ள மால்டோவாவையோ அல்லது பால்டிக் நாடுகளான எஸ்தோனியா, லாத்வியா அல்லது லிதுவேனியா முதலான நாடுகளையோ தாக்கக்கூடும் என்றும் கூறியுள்ளார்.
ஆகவே, ஐரோப்பா தன்னை பாதுகாத்துக்கொள்ள உடனடியாக தயாராகவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“ரஷ்யா ஒரு போர் தொழிலுக்கு மாறிவிட்டது,” ஹாஃப்மேன் மேலும் கூறினார். உக்ரைனுக்கு எதிரான போரின் காரணமாக மாஸ்கோவின் படைகள் தற்போது பலவீனமடைந்ததாகத் தோன்றினாலும், இந்த பலவீனம் “தற்காலிகமானது” என்று அவர் கூறினார். ரஷ்யா போரில் வெற்றி பெற்றால், அது “இறுதியில் போர் இயந்திரத்தை மீண்டும் உருவாக்கி அதன் ஆயுதப் படைகளை மீண்டும் கட்டியெழுப்பிவிடும்” என்று இராணுவத் தலைவர் எச்சரித்தார்.