ஐரோப்பா

சுவிஸில் அமலாகும் நடைமுறை – மீறினால் ஆயிரம் சுவிஸ் பிராங்க் அபராதம்

சுவிட்சர்லாந்தில் முகத்தை மூடியபடி பொது வெளிகளில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நடைமுறை வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பல்வேறு மக்களின் எதிர்ப்புகளையும் தாண்டி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் மீறினால், ஆயிரம் சுவிஸ் பிராங்க் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சர்ச்சைகளுக்குள்ளாகியிருக்கும் புர்காவுக்குத் தடை என்பது, வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

சில விதிவிலக்களுடன் இது நடைமுறைப்படுத்தப்பட்டாலும், விதியை மீறினால் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக, பெடரல் கவுன்சில் அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில், இது தொடர்பான தீர்மானம் கடந்த 2021ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தது. அதே வேளையில், விமானங்களுக்குள், தூதரக, தூதரக வளாகங்களில் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்படாது, வழிபாட்டுத் தலங்கள், பிற புனித தளங்களிலும், மசூதிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது என்றும் ஆளும் பெடரல் கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை மறைத்துக்கொள்ளலாம், ஆனால், மத ரீதியாக அல்லது தட்பவெப்ப நிலை காரணமாக செய்யக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. சிலர் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத போது, முகத்தை மூடிக்கொள்ளவும் முன் அனுமதி பெற்று வரலாம் என்றும் கூறப்படுகிறது.

(Visited 47 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!