கவர்ச்சி புகைப்படங்கள் குறித்து பிரியங்கா மோகன் வெளியிட்ட உண்மை

நேற்று அனைத்து சோசியல் மீடியாக்களிலும் பிரியங்கா மோகன்தான் ஹாட் நியுஸ். அவர் துணியை மட்டும் சுற்றிக்கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்ததுதான் காரணம்.
இதை கண்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர். காரணம் பியங்கா மோகன் ஒரு ஹோம்லி நடிகை. ஆபாசமோ, கவர்ச்சியோ அவரது படங்களில் இருந்ததில்லை. அது தனக்கு செட் ஆகாது என்று அவரே கூறியிருக்கின்றார்.
இந்த நிலையில் நேற்று பிரியங்கா மோகனம் குளித்துவிட்டு வருவதைப்போல் தலையில் ஒரு துணியை கட்டிக்கொண்டு, உடம்பில் ஒரு துணியை சுற்றிக்கொண்டு, அதிலும் மேக்கப் போட்டுக்கொண்டு இருக்கும் படங்கள் வெளியாகின.
இது குறித்து அவர் தனது பதிவில் கூறியுள்ளதாவது:
“ஏஐ உதவியால் என்னைப் போலவே போலியாகச் சித்திரித்த சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவுகின்றன. தயவு செய்து அந்தப் புகைப்படங்களைப் பகிர்வதை அல்லது பரப்புவதை நிறுத்துங்கள்.
ஏஐ பொறுப்பான படைப்பாற்றலுக்கு பயன்படுத்த வேண்டும்; தவறானவற்றுக்காக அல்ல. நாம் எதை உருவாக்குகிறோம், பகிர்கிறோம் என்பதில் கவனம் தேவை. நன்றி” எனக் கூறியுள்ளார்.
தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா அருள் மோகனன். தமிழில் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் படங்களில் நடித்துள்ளார்.
தற்போது, கவினின் 9-ஆவது படத்தில் நாயகியாக நடித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.