ரிலேசன்ஷிப்பில் இருக்கும்போதே கர்ப்பம் : ரசிகரின் கேள்விக்கு காட்டமாக பதிலளித்த நடிகரின் காதலி

ஹிந்தியில் டான், ஓம் சாந்தி ஓம், ஹவுஸ்புல், ரா ஒன் போன்ற படங்களில் நடித்துள்ளவர் அர்ஜுன் ராம்பால். இவர் தற்போது கேப்ரியலா என்பவருடன் ரிலேசன்ஷிப்பில் இருந்துவருகிறார்.
திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வரும் இவர்களுக்கு கடந்த 2019 ஆண்டு ஆரிக் என்ற மகன் பிறந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் கர்பம் தரித்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட கேப்ரிலாவிற்கு அவரது காதலர் ஹார்ட்டின் மூலம் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்த நிலையில் மீண்டும் கேப்ரியலா கர்ப்பமாக இருக்கும் போட்டோவை பதிவிட ரசிகர் ஒருவர் நீங்கள் எப்பொழுது திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்கள்? நீங்கள் இந்தியாவில் வசித்துக்கொண்டிருக்கிறீர்கள். இளைஞர்களின் மன நிலையை கெடுக்கிறீர்கள் என்று கோபமாக கமெண்ட் செய்திருந்தார்.
அதற்கு பதிலளித்த கேப்ரியலா ‘ஆம் ஒரு அழகான உயிரை உலகிற்குக் கொண்டு வருவதால் தான் இங்குள்ள மனநிலை கெட்டுப் போகிறது சிறிய எண்ணம் கொண்ட பெரியவர்களால் அல்ல.’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.