பிரான்சில் மீண்டும் அரசியல் நிச்சயமற்ற தன்மை : பிரதமர் பதவி விலகுவாரா?
பிரான்சில் மீண்டும் அரசியல் நிச்சயமற்ற தன்மை உருவாகியுள்ளது.
சிறப்பு நிர்வாக அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டமியற்றுபவர்களின் வாக்கெடுப்பு இல்லாமல் தனது பட்ஜெட்டை அங்கீகரிக்கப் போவதாக பிரதமர் பிரான்சுவா பேய்ரூ எச்சரித்ததை அடுத்து, இந்நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய பிரதமரின் இந்த நடவடிக்கை நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பரில் பட்ஜெட் தகராறுகளால் தூண்டப்பட்ட நம்பிக்கைத் தீர்மானம் பிரதமர் மைக்கேல் பார்னியர் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட காரணமாக அமைந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் அவ்வாறான ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





