இந்தியா செய்தி

இந்தியா – பாகிஸ்தான் இடையே மீண்டும் அரசியல் சர்ச்சை

இந்தியா – பாகிஸ்தான் இடையே மீண்டும் அரசியல் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்திய உளவுத்துறையை குறிவைத்து பாகிஸ்தானின் சமீபத்திய குற்றச்சாட்டு இதற்குக் காரணம் ஆகும்.

பாகிஸ்தான் மண்ணில் இந்திய ஏஜெண்டுகளால் இரண்டு குடிமக்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது.

முன்னதாக, கனடா மற்றும் அமெரிக்காவும் இந்தியா மீது இதே போன்ற இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.

எனினும், பாகிஸ்தானின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த அறிக்கைகளின் நோக்கம் இந்தியாவுக்கு விரோதமான எதிர்வினையை உருவாக்குவதாகும் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு கொலைகளும் கடந்த ஆண்டு செப்டம்பரில் ராவல்கோட் நகரிலும், அக்டோபரில் சியால்கோட் நகரங்களிலும் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது.

ஆனால் கொல்லப்பட்டவர்கள் யார் அல்லது கொலைக்கு காரணமானவர்கள் யார் என்பதை பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஆனால், சர்வதேச சட்டத்தை இந்தியா அப்பட்டமாக மீறிவிட்டதாகவும், இந்தக் கொலைகளுக்கு இந்தியாதான் காரணம் என்றும் பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!