குவைத்தில் 101 வயதான முன்னாள் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியை சந்தித்த பிரதமர் மோடி
இரண்டு நாள் பயணமாக குவைத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளியுறவுத் துறையின் (IFS) முன்னாள் அதிகாரியான 101 வயதான மங்கள் சைன் ஹண்டாவை சந்தித்துப் பேசினார்.
ஹண்டாவின் பேத்தி ஸ்ரேயா ஜுனேஜா எக்ஸ் தளத்தில் கோரிக்கை விடுத்ததை அடுத்து சந்திப்பு நடைபெற்றது.
தனது பதிவில், ஜுனேஜா தனது தாத்தாவை பிரதமர் மோடியின் மிகப்பெரிய அபிமானி என்று விவரித்ததோடு, புலம்பெயர்ந்த இந்தியர்களுடனான அவரது உரையாடலின் போது அவரைச் சந்திக்குமாறு பிரதமரைக் கேட்டுக் கொண்டார்.
எக்ஸ் தளத்தில் ஜுனேஜாவின் கோரிக்கைக்கு பிரதமர் மோடி விரைவாக பதிலளித்து இந்த சந்திப்பை மேற்கொண்டார்.
(Visited 1 times, 1 visits today)