இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருப்பதாக கூறும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்த்தை கடைப்பிடிக்கிறோம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதில் கூறியுள்ளபடி உண்மையாக நடந்துகொள்வோம். போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக கடைப்பிடிக்கிறோம்.
இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து அமலில் உள்ளது. எனவே, போர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்வதற்கு காலாவதி தேதி தேவை இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
(Visited 3 times, 3 visits today)