ஐரோப்பா

வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை – டுபாய் அரச ஊழியர்களுக்கு வெளியான அறிவிப்பு

டுபாயில் அரச ஊழியர்களுக்கு வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை நாளாக உத்தரவிட்டுள்ளது.

கோடை காலம் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், வேலை நேரத்தையும் குறைத்து டுபாய் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்தாண்டு கோடை காலத்தையொட்டி, அரசு ஊழியர்களுக்கு வேலை நாட்கள் குறைக்கப்பட்டு, சோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்தாண்டும் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதங்கமைய, குரூப் 1 அரசு ஊழியர்களுக்கு திங்கள் முதல் வியாழன் வரை 8 மணிநேரம் (காலை 7.30 – பிற்பகல் 3.30) மட்டுமே வேலை நேரமாகவும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு விடுமுறையாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2 அரசு ஊழியர்களுக்கு திங்கள் முதல் வியாழன் வரை 7 மணிநேரமும், வெள்ளிக்கிழமை 4.30 மணிநேரமும் வேலை நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் செப்டம்பர் 12 வெள்ளிக்கிழமை வரை இந்த வேலை நேரம் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையை உறுதிசெய்ய நேரம் குறைக்கப்பட்டிருப்பதாகவும், கடந்தாண்டு சோதனை முறையில் செயல்படுத்தப்பட்ட திட்டத்தால் உற்பத்தி அதிகரித்ததாக துபை மனிதவளத்துறை தெரிவித்துள்ளது.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்