இலங்கை

மட்டக்களப்பு சிறைச்சாலையில் சக கைதிகள் தாக்கியதால் கைதி ஒருவர் மரணம்!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த கைதி கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் இன்று சனிக்கிழமை (1) கண்டறியப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சோந்த 47 வயதுடைய சோமசுந்தரம் துரைராஜா கடந்த 27ம் திகதி கசிப்பு வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த நபர் செவ்வாய்க்கிழமை (28) சிறைச்சாலையில் சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் உத்தரவிட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் மொட்டையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதாலேயே மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

குறித்த கைதி, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்ற கைதிகளுடன் முரண்பட்டு அந்தக் குழுவினர் அவரைத் தாக்கியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

(Visited 16 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!