இந்தியா மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து பின்வாங்கப்போவதில்லை – அதிரடி காட்டும் கனடா
இந்தியா மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து பின்வாங்கப்போவதில்லை எனக் கனடா கூறியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் சீக்கியச் சமயத் தலைவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மீண்டும் கருத்து வெளியிட்ட பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா அவற்றைக் கவனிக்கவேண்டும் என்று கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருக்கிறார்.
அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த இந்தியா, அவை அபத்தமானவை என்று கூறியது. கடந்த ஜூன் மாதம் வான்கூவர் அருகில் சீக்கியச் சமயத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்டார்.
அவரை இதற்கு முன்னர் பயங்கரவாதி என இந்தியா வகைப்படுத்தியிருந்தது. காலிஸ்தான் எனும் சீக்கியர்களுக்கான தனி நாட்டை உருவாக்குவதற்கு அவர் ஆதரவளித்தவர்.
அவரின் மரணத்துக்கும் இந்திய உளவுத் துறையினருக்கும் சம்பந்தம் இருப்பதைக் காட்டும் நம்பகமான தகவல் தன்னிடம் இருப்பதாகக் கனடா சொல்கிறது.
குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் அக்கறை தெரிவித்துள்ளன.