ட்ரம்பை சந்திக்க எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறேன் – வடகொரிய தலைவர்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அணுசக்தி திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை கைவிட்டால், எந்த நேரத்திலும் அவரை சந்திக்கத் தயாராக இருப்பதாக வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் கூறியுள்ளார்.
பியோங்யாங்கில் உள்ள உச்ச மக்கள் சபையில் ஆற்றிய உரையில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
இரு தலைவர்களும் இதற்கு முன்பு மூன்று முறை சந்தித்துள்ளனர், மேலும் அந்த சந்திப்புகள் குறித்த இனிமையான நினைவுகள் இன்னும் இருப்பதாக வட கொரியத் தலைவர் கூறினார்.
பதவியில் இருக்கும்போது வட கொரிய எல்லையைக் கடந்த முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆவார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு கிம் மற்றும் டர்ம்பிற்கு இடையிலான வரலாற்று சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது அணுஆயுத பயன்பாடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான குழுவை நியமிப்பது தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது.
இருப்பினம் அணுசக்தி கொள்கைகள் தொடர்பில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. அந்த பேச்சுவார்த்தைகள் அதற்கு பிறகு கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





