இலங்கை காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையின் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அந்தவகையில், மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேலும், மேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும்.
இதேவேளை, இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.