சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

சிங்கப்பரில் வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்நோக்கும் சட்டரீதியான பிரச்சினைகளுக்கு உதவும் வகையில் புதிய நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சம்பளப் பிரச்சினை, காயம் போன்றவற்றுக்கும் மற்ற வகை சட்டரீதியான உதவிக்கும் அவர்கள் நிலையத்தை நாடலாம்.
சிராங்கூன் ரோட்டில் அமைந்திருக்கும் நிலையத்தில் முழுநேரமாக வழக்கறிஞரும் தொண்டூழியர்களும் சேவை வழங்குவர்.
தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸும் Pro Bono SG எனும் இலவசச் சட்ட உதவி வழங்கும் அமைப்பும் இணைந்து நிலையத்தைத் தொடங்கியிருக்கின்றன.
வெளிநாட்டு ஊழியர்கள் சட்டச் சேவைகளை மேலும் எளிதாக நாடுவதற்கு வசதி செய்துதரப்படவேண்டும் என்று சமூக ஆர்வலர் குழுக்கள் கேட்டுக்கொண்டுள்ளது.
அதற்கமைய, இந்த புதிய நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது.
(Visited 19 times, 1 visits today)