உக்ரைனில் போருக்கு மத்தியில் பெரும் ஊழல்! ஜெலென்ஸ்கியின் நெருங்கிய வட்டாரத்திற்கு தொடர்பு
உக்ரைனில் போர்ப் பதற்றம் நிலவி வரும் இந்தச் சூழ்நிலைக்கு மத்தியில், நாட்டில் ஒரு பெரும் ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த ஊழலில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட நபர், எரிசக்தித் துறையில் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உக்ரைனிய புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் இது தொடர்பான விபரங்களை கண்டறிந்துள்ளனர். ரஷ்யாவின் தீவிர தாக்குதலுக்கு மத்தியில் நாட்டுக்கான அத்தியாவசியத் தேவைகளில் இவ்வளவு பெரிய அளவில் நிதி மோசடி நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர். இவ்வாறான நிலையில் இந்தச் சம்பவம் அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரின் மீதான விசாரணைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் உயர் மட்டங்களில் ஊழல் ஒழிப்பை உறுதிப்படுத்துவது ஜெலென்ஸ்கியின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும்.




