கதிர்காமம் பெரிய விகாரையில் காணாமல் போன தங்கம்!! இருவரை கைது செய்ய உத்தரவு
ருஹுணு கதிர்காமம் பெரிய விகாரையின் தலைவர் கபு மற்றும் ஆலய அங்காடி பொறுப்பதிகாரி கபு ஆகியோரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தில் இருந்து 38 பவுண் தங்கம் காணமல் போன சம்பவம் தொடர்பில் இவர்களை கைது செய்யுமாறு உத்தரவிப்பட்டுள்ளது.
பாதாள உலகக் குழுத் தலைவர் அங்கொட லொக்காவின் மனைவி இந்த தங்க காணிக்கை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
கதிர்காமம் மகா விகாரையின் பிரதானி கபு துரந்தர சோமிபால ரத்நாயக்க மற்றும் ஆலய அங்காடிக்கு பொறுப்பான கபு துரந்தர பிரதான் கபுராலவின் பேரன் சமன் பிரியந்த அல்லது சுட்டி கபு ஆகியோரை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கடந்த 2021ஆம் ஆண்டு பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
பின்னர், விசாரணைகள் அப்போது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த தேஷ்பந்து தென்னகோனினால் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.