துருக்கியுடனான 40 ஆண்டுகால மோதலை முடிவிற்கு கொண்டுவந்த குர்திஸ்தான் கட்சி

குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK), துர்க்கியுடன் போர்நிறுத்தத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.
PKK சார்பு செய்தி நிறுவனம் (ANF) வெளியிட்ட சட்டவிரோதக் குழுவின் அறிக்கை, துருக்கிய அரசுடன் 40 ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது.
“PKK தலைவர் ஓகலனின் அமைதி மற்றும் ஜனநாயக சமுதாயத்திற்கான அழைப்பை செயல்படுத்துவதற்கு வழி வகுக்கும் வகையில், இன்று முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக நாங்கள் அறிவிக்கிறோம்,” என்று PKK நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.
“அழைப்பின் உள்ளடக்கத்தை அப்படியே நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், மேலும் அதைப் பின்பற்றி செயல்படுத்துவோம் என்று நாங்கள் கூறுகிறோம்,” என்று குழு தெரிவித்துள்ளது.
“தாக்குதல் நடத்தப்படாவிட்டால் எங்கள் படைகள் எதுவும் ஆயுதமேந்திய நடவடிக்கை எடுக்காது” என்று மேலும் தெரிவித்துள்ளது.