பொழுதுபோக்கு

ஆண் குழந்தைக்கு தாயானார் ஜாய் கிரிசில்டா… ரங்கராஜின் பதில் என்ன?

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொவதாக கூறி, ஏமாற்றியதாக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு தங்களுக்கு திருமணம் நடைபெற்றதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் ஜாய் கிரிசில்டா கூறியிருந்தார்.

தான் கருவுற்ற நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னிடமிருந்து விலகியதாகவும் ஜாய் கிரிசில்டா குற்றம் சாட்டியிருந்தார்.

ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தார்.மேலும் ரங்கராஜால் பல முறை கருவுற்று அவரின் வற்புறுத்தலால் கருக்கலைப்பும் செய்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில் தான் நிறைமாத கர்பிணியாக இருப்பதால் ஆடை வடிவமைப்பில் ஈடுபட முடியவில்லை என்பதாலும், தற்போது தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ் தான் தந்தை என்றும், 7 மாத கர்பிணியாக இருக்கும் தனக்கு மருத்துவ செலவு, வீட்டு வாடகை, மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் 6,50,000 ரூபாய் பராமரிப்பு செலவு தொகையை ரங்கராஜ் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ஜாய் கிரிசில்டாவுக்கு நேற்றிரவு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகளிர் ஆணையம் , காவல்துறை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி வெளியிட்டு தெரிவித்துள்ளார். அதில் தனக்கும் – மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாதது போல் ரங்கராஜ்  அமைதிகாத்து வருகின்றார்.

(Visited 5 times, 5 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்