ரபா எல்லையை இஸ்ரேல் ராணுவம் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும் – பிரதமர் உத்தரவு
எகிப்து மற்றும் ரபா எல்லையை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான அவசியம் உள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
ரஃபா எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த தலைவர்களை அவர் சந்தித்துப் பேசினார்.
இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகளால் பிணைக் கைதிகளை விடுவிப்பது குறித்து ஹமாஸ் அமைப்பினர் மீது அழுத்தம் அதிகரித்துள்ளதாக நெதன்யாகு தெரிவித்தார்.
சமீபத்திய ஒப்பந்தம் மூலம், முதல் கட்டத்திலேயே அதிகப்படியான பிணைக் கைதிகள் விடுவிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
(Visited 47 times, 1 visits today)





