2022 முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரெஞ்சு சுற்றுலாப் பயணியை விடுவித்த ஈரான்

ஈரானிய அதிகாரிகளால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரெஞ்சு சுற்றுலாப் பயணி விடுவிக்கப்பட்டு பிரான்சுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
34 வயதான ஆலிவர் க்ரோண்டியோ “சுதந்திரமாக” இருக்கிறார், “அவரது குடும்பத்தின் மகத்தான மகிழ்ச்சியையும் நிம்மதியையும் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.” என மக்ரோன் வியாழக்கிழமை X இல் எழுதினார்
க்ரோண்டியோ அக்டோபர் 2022 இல் தெற்கு ஈரானில் கைது செய்யப்பட்டு, “இஸ்லாமிய குடியரசிற்கு எதிரான சதி” செய்ததற்காக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் எப்போதும் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகின்றனர்.
ஈரானிய ஆட்சி சமீபத்திய ஆண்டுகளில் பல சுற்றுலாப் பயணிகளையும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களையும் கைது செய்துள்ளது, பெரும்பாலும் உளவு பார்த்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு குற்றச்சாட்டுகளின் பேரில்.