IPL Match 61 – 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று நடைபெற்ற 61வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. கடைசி பந்தில் ஆகாஷ் தீப் சிக்சர் அடித்து அணி 200 ரன்களை எட்ட உதவினார்.
ஐதராபாத் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய அதர்வா டெய்ட் 13 ரன்களில் வெளியேறினார். 18 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்த அபிஷேக் ஷர்மா 59 ரன்களில் (20 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார்.
இந்த நிலையில் ஐதராபாத் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் களம் கண்ட லக்னோ அணி இந்த தோல்வியின் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.