இலங்கை

மட்டக்களப்பு – கோட்டைமுனை சிரேஸ்ட பிரஜைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் தினம் அனுஷ்டிப்பு

சர்வதேச முதியோர் தினம் மற்றும் சர்வதேச சிறுவர் தினங்கள் இன்றாகும்.இதனை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

சர்வதேச முதியோர் தினம் இந்த ஆண்டு அரோக்கியமான அகவையினை நோக்கி,முதியோர் உரிமைகளை பாதுகாத்தல் ஆகிய தொனிப்பொருளைக்கொண்டு அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோட்டைமுனை சிரேஸ்ட பிரஜைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் தினம் இன்று நடைபெற்றது.கோட்டைமுனை விஸ்வகர்மா கலாசார மண்டபத்தில் இந்த நிகழ்வில் கோட்டைமுனை சிரேஸ்ட பிரஜைகள் சங்கத்தின் தலைவர் சி.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் ப.இராஜ்மோகன் சிறப்பு அதிதியாகவும் பிரதேச செயலக முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி நிலக்சி நிரூசன்,கிராம சேவையாளர் திருமதி பிரியதர்சினி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது முதியோர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான அங்கத்துவ அட்டைகளும் வழங்கிவைக்கப்பட்டன.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!