ஜெர்மனியில் ஓய்வூதியம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

ஜெர்மனியில் இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், அது தொடர்பான இறுதித் தீர்மானம் அரச தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய மில்லியன் கணக்கான ஓய்வூதியதாரர்கள் இந்த உயர்வு காரணமாக 3.74% கூடுதல் பணத்தைப் பெற உள்ளனர்.
இந்த உயர்வு எதிர்பார்த்ததை விட அதிகமாகும் என ஜெர்மனியர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி, ஜூலை 2025 வரை ஓய்வூதியம் 48% ஆக இருக்கும் என்று அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது.
உதாரணமாக, ஓய்வூதியம் பெறுபவர் தற்போது 1,000 யூரோக்களைப் பெற்றால், அவர்கள் 37.40 யூரோக்களை கூடுதலாக பெறுவார்.
1,500 யூரோ ஓய்வூதியம் உள்ளவர்களுக்கு 56.10 யூரோக்கள் கூடுதலாக கிடைக்கும். அதே நேரத்தில். 2,000 யூரோ ஓய்வூதியம் பெறுபவர் 74.80 யூரோக்களை அதிகமாக பெறுவார்.
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி 48% ஓய்வூதிய அளவை நிரந்தரமாக்க விரும்புகிறது. அதே நேரத்தில் சில குழுக்கள் குறித்த தொகையை 53% ஆக அதிகரிக்கக் கோருகின்றன.
ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்கள் ஓய்வூதியத்தை வைத்துக் கொள்ளவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இருந்து பயனடையவும் இந்த ஓய்வூதிய சீர்திருத்தம் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.