இஸ்ரேலுக்கான விசா வழங்குவதை நிறுத்திய இந்தோனேசியா!

இஸ்ரேலும் ஹமாஸும் போர்நிறுத்தத்தை ஒப்புக்கொண்டுள்ளன. இருப்பினும் இஸ்ரேலுக்கான விசா வழங்குவதை இந்தோனேசியா தொடர்ந்து மறுத்து வருகின்றது.
இந்தோனேசியாவில் இந்த மாதம் ஜிம்னாஸ்டிக் (gymnasts) உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துகிறது. இதில் கலந்துகொள்ள இஸ்ரேலியர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலியர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்தோனேசிய ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பின் தலைவர் இட்டா ஜூலியாட்டி தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மையை கொண்ட இந்தோனேசியா பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது.
பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் வரை இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தப் போவதில்லை என்று உறுதிப்பட தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(Visited 4 times, 1 visits today)