கனடாவில் இருந்து இந்திய மாணவர்கள் நாடுகடத்தப்பட்ட விவகாரம் : குடியேற்ற முகவருக்கு சிக்கல்!
இந்திய குடியேற்ற முகவர் பிரிஜேஷ் மிஸ்ரா, சர்வதேச மாணவர்களுக்கான மோசடி ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கனடாவின் டொராண்டோவில் நடைபெற்ற போராட்டத்தின் போது இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் நாடு கடத்தப்படுவதை எதிர்கொண்டனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் குடியேற்ற முகவரான மிஸ்ரா புதன்கிழமை வான்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் மிஸ்ராவிற்கு சுமார் 19 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனவும், சில வேளைகளில் அவர் பரோல் பெறுவதற்கு தகுதி பெறுவார் எனவும் கூறப்படுகிறது.
இதற்கு பின் அவர் நாடுகடத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 12 times, 1 visits today)





