இந்தியாவைவிட்டு வெளியேற கனடா தூதருக்கு உத்தரவு!
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் கனடா- இந்தியா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, கனடா உயர் அதிகாரியை மத்திய அரசு வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது.
கனடிய சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar) சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்திய அரசாங்கத்துக்குத் தொடர்பிருக்கலாம் என்று கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) கூறியிருந்தார்.
முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கனடிய மண்ணில் செயல்படும் இந்திய எதிர்ப்புச் சக்திகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அது கனடாவை வலியுறுத்தியது.
கனடாவின் மூத்த அரசதந்திரி கேமரன் மெக்கையை (Cameron MacKay) நாட்டைவிட்டு வெளியேற இந்தியா 5 நாள் கெடு விதித்துள்ளது.
இந்திய அரசதந்திரி ஒருவரைக் கனடா வெளியேற உத்தரவிட்ட சில மணிநேரத்தில் இந்தியாவின் அறிவிப்பு வெளியானது.
தனது உள்நாட்டு விவகாரத்தில், கனடாவின் தலையீடு அதிகரித்துவருவதாகப் புதுடில்லி கூறிவருகிறது.
ஒட்டாவாவின் அண்மை முடிவு அதையே பிரதிபலிப்பதாக இந்தியா குறிப்பிட்டது.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான புதிய பூசல் குறித்து அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளன.