இலங்கையில் அதிகரித்து வரும் சட்டவிரோத கருத்தரிப்பு
நாடளாவிய ரீதியில் சட்டவிரோதமாக கருத்தரிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இவ்வாறு கருத்தரிப்போரில் கூடுதலானவர்கள், திருமணம் முடிக்காதவர்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சட்டவிரோத கருத்தரித்தல் உள்ளிட்ட பெரும்பாலான தவறுகள் முக்கியமாக அலைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஏற்படும் உறவுகளால் ஏற்படுவதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான தவறுகள் 2020 ஆம் ஆண்டு 34 இடம்பெற்றுள்ளன. 2021 இல் 48 ஆக அதிகரித்தது. இது 41 சதவீதமாகும். 2022 இல் 65 ஆக அதிகரித்தது. இது 35 சதவீத அதிகரிப்பாகும் என்பது பொலிஸ் தலைமையகத்தின் 2022 வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் 2021 இல் 63 சதவீதமாகவும் 2022 இல் 46 சதவீதமாகவும் குறைந்துள்ளது என்றும் பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.