இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான ஆரம்பமான சரக்கு கப்பல் சேவை!

பாண்டிச்சேரியில் இருந்து தென்னிந்தியாவின் காங்கேசன்துறைக்கு சரக்கு கப்பல் சேவை ஆரம்பமாகியுள்ளது.
எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் இந்த சேவையை தொடங்குவதற்கு ஹேலிஸ் நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது.
அதன்படி அந்த நிறுவனம் சரக்கு போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளதுடன் மேலும் நான்கு நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவில் காரைக்கால் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்து சேவையை கடந்த மே 15 முதல் தொடங்க திட்டமிடப்பட்டது.
எனினும், இந்த பயணிகள் கப்பல் சேவை தொடங்குவதற்கு மேலும் கால அவகாசம் வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளதால், அதன் தொடக்கம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சரக்கு போக்குவரத்து எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
(Visited 23 times, 1 visits today)