Site icon Tamil News

போருக்கு மத்தியில் வேறு ஒருவரிடம் பதவியை பொறுப்பு கொடுக்கும் நெதன்யாகு!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யவுள்ளதாக அவருடைய அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

“வழக்கமான உடற்பரிசோதனையின் போது அவருக்கு குடலிறக்கம் உள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் அவர் தற்போது நலமாக இருப்பதாக அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில்  துணைப் பிரதமரும் நீதி அமைச்சருமான யாரிவ் லெவின் தற்காலிக பிரதமராக பணியாற்றுவார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

74 வயதான நெதன்யாகு, முன்னதாக கடந்த ஆண்டு, இதயமுடுக்கியைப் பொருத்துவதற்கான சத்திர சிகிச்சையை மேற்கொண்டிருந்தார்.

இதற்கிடையில் தற்போது ஹமாஸுடான போர் குறித்த வியூகங்களையும் அவர் வகுத்து வைத்துள்ளார். இவ்வாறான ஒரு சூழ்நிலையில், தற்போது இடம்பெற்றுள்ள இந்த குறுகியகால ஆட்சி மாற்றம் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

Exit mobile version