சீனிக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!
இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு விதிக்கப்பட்ட விசேட பண்டக வரியானது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ கிராமிற்கு 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, திருத்தப்பட்ட வரி இன்று (02.11) முதல் நடைமுறைக்கு வரும் என்றும் ஒரு வருடத்திற்கு செல்லுப்படியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட சரக்கு வரிச்சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இது தொடர்பான அரசாங்க அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)





