வண்டியுடன் வெள்ள நீரில் சிக்கிய இளைஞர்
கோவையில் கடந்த நான்கு நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை நேரங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் சுந்தராபுரம்,மாச்சம்பாளையம், பிள்ளையார்புரம், மதுக்கரை பகுதியில் பெய்த தொடர் கனமழையால் மதுக்கரை, வேலந்தாவளம் வழியாக கேரளா செல்லும் மஞ்சப்பள்ளம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மதுக்கரை ஆற்று விநாயகர் கோவில் அருகே ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலத்திற்கு 4 அடிக்கு மேல் வெள்ள நீர் சென்ற நிலையில், […]













