உலகம் செய்தி

அமெரிக்காவில் தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை

  • May 5, 2023
  • 0 Comments

உலகிலேயே முதன்முறையாக தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுமார் 34 வாரங்கள் தாயின் வயிற்றில் வளர்ந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு குழந்தை பிறந்தது. சுமார் 30 வாரங்களில் ஸ்கேன் செய்து பார்த்ததில்இ […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் இளம் பிக்குகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது அதிகரிப்பு!

  • May 5, 2023
  • 0 Comments

இளம் பிக்குகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவது அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளதாகவும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும்  சிறுவர் துஸ்பிரயோக அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில், பௌத்த ஆலயங்களில் இளம் பிக்குகளை துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக  சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. குற்றவியல் முறைப்பாடுகள் கிடைத்தால் பொலிஸார் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை  வேண்டுகோள் விடுத்துள்ளது. தேசிய சிறுவர் அதிகாரசபை என்ற அடிப்படையில் சிறுவர்களிற்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக சட்டநடவடிக்கை […]

ஐரோப்பா

உக்ரைன் கொடியை பிடிங்கிய ரஷ்ய பிரதிநிதியால் உச்சிமாநாட்டில் பதற்றம்!

  • May 5, 2023
  • 0 Comments

துருக்கியில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் ரஷ்ய பிரதிநிதி ஒருவர் உக்ரைன் கொடியை இழுத்ததை தொடர்ந்து மோதல் ஏற்பட்டுள்ளது. உக்ரேனிய பாராளுமன்ற உறுப்பினர் ஒலெக்சாண்டர் மரிகோவ்ஸ்கி தனது தேசியக் கொடியை ரஷ்ய தூதுக்குழு உறுப்பினர் ஓல்கா டிமோஃபீவாவிற்கு பின்னால் ஏற்றினார். ரஷ்ய அணியின் மற்றொரு உறுப்பினரான, வலேரி ஸ்டாவிட்ஸ்கி,  மரிகோவ்ஸ்கியின் கைகளில் இருந்து கொடியை இழுத்தார். இதனால் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.  

ஐரோப்பா

கடந்த 4 நாட்களில் ரஷ்யா மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில், 100 பேர் உயிரிழப்பு!

  • May 5, 2023
  • 0 Comments

உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய வான்வழித் தாக்குதல்களில் கடந்த 4 நாட்களில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில், ஐந்து குழந்தைகளும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. “உக்ரைனில் என்ன நடக்கிறது என்பதை அமெரிக்கா ஒருபோதும் பார்த்துக் கொள்ளாது” என்று வெளியுறவுத்துறையின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறினார். கிரெம்ளின் மீதான ட்ரோன் தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ள நிலையில், அமெரிக்கா இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் இன்னும் ட்ரோன் […]

ஆப்பிரிக்கா

எகிப்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழப்பு!

  • May 5, 2023
  • 0 Comments

தென்மேற்கு எகிப்தில் பயணிகள் பேருந்தொன்றுடன், லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், 17 பேர் உயிரிழந்துள்ளனர்.  அத்துடன் 29 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு 26 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  விபத்துக்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் விவரிக்கவில்லை. வேகம் மோசமான சாலைகள் அல்லது போக்குவரத்து சட்டங்களை சரியாக செயல்படுத்தாததால் விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுவதாக கூறப்படுகிறது

இலங்கை செய்தி

காதலியை கட்டையால் அடித்து கொன்ற காதலன்

  • May 5, 2023
  • 0 Comments

காதலியை கட்டையால் அடித்து கொன்ற காதலன் இன்று (05) பல்லேகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிமத்தலாவ பகுதியைச் சேர்ந்த முப்பத்தைந்து வயதுடைய ஒருவரே தாக்குதலில் உயிரிழந்துள்ளார். காதலிக்கு வேறு காதலர்கள் உள்ளனர் என்ற சந்தேகம் காரணமாக இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டமையே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மத்திய கிழக்கு

நைஜீரியாவில் பயங்கரவாத குழுவை சேர்ந்த 40 பேர் கொலை!

  • May 5, 2023
  • 0 Comments

நைஜீரியா நாட்டில் பயங்கரவாத குழுக்களை சேர்ந்த 40 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரச அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். அரசுக்கு எதிராக பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவை கட்டுப்படுத்த அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி கடந்த 2 வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில், 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அந்த குழுவினரின் குடும்பத்தினர் குழந்தைகள் உள்பட 510 பேர் அரசிடம் சரண் அடைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

வெசாக் காண கொழும்புக்கு வரும் மக்கள் வாகனம் நிறுத்தும் இடங்கள்

  • May 5, 2023
  • 0 Comments

கொழும்பு நகரில் வெசாக் அதிசயத்தை காண வரும் மக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு பல இடங்களை பொலிஸார் ஒதுக்கியுள்ளனர். அதன்படி புத்தலோக வெசாக் வலயம், புத்த ரஷ்மி வெசாக் வலயம் மற்றும் காலி மவுத் ஜனாதிபதி அலுவலக வெசாக் வலயத்தின் அழகை காண வரும் மக்களுக்காக வாகனத் தரிப்பிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இலங்கை

இலங்கையை விட்டு வெளியேறிய 350 வைத்தியர்கள்!

  • May 5, 2023
  • 0 Comments

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் கடந்த ஒன்பது மாதங்களில் சுமார் 350 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் மூன்றாம் நிலை பராமரிப்பு சேவைகள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் பணியாற்றுவதற்கு 2837 விசேட வைத்திய நிபுணர்களும்  23000 பொது வைத்தியர்களும் தேவைப்படுகின்றனர். இந்நிலையில்  தற்போது 50 விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் 250 வைத்தியர்களும் வெளிநாடு சென்றுள்ளனர். நோயாளர் பராமரிப்பு சேவைகளை பேணுவதற்கு இடையூறாக […]

உலகம் செய்தி

ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

  • May 5, 2023
  • 0 Comments

ஜப்பானின் இஷிகாவா பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் உள்நாட்டில் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக நாகானோ மற்றும் கனாசாவா இடையேயான ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. நிலச்சரிவும் ஏற்படக்கூடும் என நாட்டின் அனர்த்த திணைக்களங்கள் ஏற்கனவே எச்சரித்துள்ள போதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!