ஆஸ்திரேலியாவில் இணையப் பாதுகாப்பிற்காக அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் அரசாங்கம்
ஆஸ்திரேலியாவில் புதிய இணையப் பாதுகாப்பு ஆணையத்தை அமைக்க மத்திய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அங்குப் பெரிய அளவிலான ஊடுருவல் சம்பவங்கள் நடைபெற்றதை அடுத்து அதற்கான ஏற்பாடு செய்யப்படுகிறது. பிரதமர் ஆன்ட்டனி ஆல்பனீசி (Anthony Albanese) ஆணையத்தை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இணையப் பாதுகாப்புத் தொடர்பில் வட்டமேசைக் கலந்துரையாடல் இடம்பெற்றது. முக்கிய இணையப் பாதுகாப்புச் சம்பவங்களைக் கையாள்வதற்கு அந்த ஆணையம் பொறுப்பு வகிக்கும். ஊடுருவல்காரர்களுக்குக் கட்டணம் செலுத்துவதற்குத் தடைவிதிப்பது பற்றிய விசாரணையையும் அது மேற்கொள்ளும். […]












