அதியுச்ச வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது ஜப்பானின் சுற்றுலாத்துறை
பெப்ரவரி மாதத்தில் ஜப்பானுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை இதற்கு முந்தைய ஆண்டை விட 88 மடங்கு அதிகமாகும். பெப்ரவரி மாதத்தில் மொத்தம் 1,475,300 வெளிநாட்டுப் பயணிகள் ஜப்பானுக்கு வருகை தந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கத் தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த எண்ணிக்கை, சுற்றுலாத் துறையில் மீண்டு வருவதற்கான அறிகுறிகளைக் காட்டினாலும், COVID-19 தொற்றுநோய் பரவுவதற்கு முன்பு பெப்ரவரி 2019 இல் இருந்த எண்ணிக்கையை விட 43.4 சதவீதம் குறைவாக இருந்தது என்று ஜப்பான் தேசிய சுற்றுலா அமைப்பு தெரிவித்துள்ளது. […]













