உலகம் ஐரோப்பா செய்தி

உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு: பிரிட்டன் பின்னடைவு!

உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் ஐக்கிய அரபு அமீகரகம் முதலிடம் பிடித்துள்ளது. இங்கிலாந்து 8 ஆவது இடத்தில் உள்ளது.

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலை கனடாவைச் சேர்ந்த ஆர்ட்டன் கேப்பிடல் என்ற பிரபல நிறுவனம் நேற்று வெளியிட்டது.

நாடொன்றின் கடவுச்சீட்டுமூலம் விசா இன்றி எத்தனை நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள முடியும் என்பதை அடிப்படையாகக்கொண்டே தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.

மேற்படி பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடம் பிடித்துள்ளது.

179 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லக்கூடிய அணுகலைப் அந்நாட்டு கடவுச்சீட்டு பெற்றுள்ளது.

சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகியவை 2வது இடத்தில் உள்ளன.

பெல்ஜியம், பிரான்ஸ், ஜேர்மனி, மலேசியா, நோர்வே, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் 3 ஆவது இடத்தில் உள்ளன.

இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் சரிவைச் சந்தித்துள்ளன.

இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் 8 ஆவது இடத்திலும், அமெரிக்கா 9 ஆவது இடத்திலும் உள்ளது.

விசா நெறிமுறைகளை கட்டுப்படுத்தியதால் இந்த நாடுகள் சரிவைச் சந்தித்தன எனக் கூறப்படுகின்றது.

 

Sanath

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!