வட அமெரிக்கா

பாதி படுக்கை வாடகைக்கு… கனடிய இளம்பெண் வெளியிட்டுள்ள அதிரடி டீல்!

கனடாவில் இளம்பெண் ஒருவர் தான் தூங்கும் படுக்கையில் பாதியை வாடகைக்கு விடத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கனடாவைச் சேர்ந்த அன்யா எட்டிங்கர் கனடாவின் டோரண்டோவில் வசிக்கிறார். சமூக ஊடக தளமான Facebook Marketplace ல் இதனை அவர் பகிர்ந்துள்ளார். தான் ஒரு ‘படுக்கைத் துணையை’ தேடுவதாக அதில் கூறியுள்ளார். தனது கிங் சைஸ் படுக்கையை வாடகைக்கு விட்டு நன்றாக சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார். இதன்மூலம் எந்தக் கடின உழைப்பும் இல்லாமல் பெரும் பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளார். தன் படுக்கையில் பாதியை யார் வேண்டுமானாலும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

அன்யா எட்டிங்கர்

இருப்பினும், இதற்கு ஒரு நிபந்தனை உள்ளது. அவரது பாதி படுக்கையை வாடகைக்கு எடுப்பவர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும், குறைந்தபட்சம் ஒரு வருடமாவது தன்னுடன் வாழ வேண்டும் என்ற நிபந்தனை விதித்துள்ளார். டோரண்டோ மிகவும் விலையுயர்ந்த நகரம். இங்கு அறை வாடகை மிகவும் அதிகமாக உள்ளது மற்றும் சாதாரண மக்கள் இந்த வாடகையை கொடுக்க சிரமப்படுகிறார்கள். அதனாலதான் ஒரு பெட் மேட்டை தேடுவதாக அவர் கூறியுள்ளார்.

இந்தப் படுக்கைக்கான வாடகை மாதம் 900 கனேடிய டொலர்கள் (இலங்கை பணமதிப்பில் ரூ.2.14 லட்சம்) என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது பாதி படுக்கையை வாடகைக்கு விடும் பெண்ணின் செயல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது

(Visited 15 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்