வெளிநாடுகளில் இருந்து ஜேர்மனியை குறிவைக்கும் ஹேக்கர்கள் : பில்லியன் கணக்கில் ஏற்படும் இழப்பு!
ஜெர்மனியில் சைபர் தாக்குதல்களால் ஏற்படும் ஆபத்துகள் அதிகரித்து வருவதாக அந்நாட்டின் பெடரல் கிரிமினல் போலீஸ் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, 2023 ஆம் ஆண்டுக்கான சைபர் கிரைம் தொடர்பான தேசிய சூழ்நிலை அறிக்கையின்படி, வெளிநாட்டில் இருந்து அல்லது தெரியாத இடத்திலிருந்து செய்யப்படும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து பதிவு செய்யப்பட்ட சைபர் கிரைம் குற்றங்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட சுமார் 28% அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும், 2023 ஆம் ஆண்டில் 800 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சைபர் க்ரைம் பற்றிய வழக்குகளை பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“சைபர் தாக்குதல்களால் மட்டும் ஆண்டுக்கு €148 பில்லியன் இழப்பு ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 6 times, 1 visits today)