பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஜெர்மனி – சர்வதேச நிறுவனம் தகவல்

ஜெர்மனி பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக சர்வதேச பொருளாதார நிறுவனம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது,
தொழில்துறை வீழ்ச்சியால் பொருளாதார பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளதாக, S and P Global நிறுவனம்தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட purchasing managers index அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கணிப்பீட்டுக்கு அமைய purchasing managers index 50 வீதத்திற்கும் குறைவாக காணப்பட்டால் அது பொருளாதார வீழ்ச்சியை குறிப்பதாகும்.
இந்த நிலையில் 20 நாடுகள் கொண்ட ஐரோப்பிய வலயமைப்பின் purchasing managers index கடந்த மாதத்தில் 46 இல் இருந்து 45.2 புள்ளியாக குறைவடைந்துள்ளது.
இது கொரோனா பெருந் தொற்றின் ஆரம்பகாலத்திற்குப் பின்னர் கொள்வனவில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியாகும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)