முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வைத்தியசாலையில் அனுமதி
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
92 வயதான மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மூச்சுத்திணறல் பிரச்சினையால் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் ஐ.சி.யூ பிரிவுக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அவரது உடல்நிலை குறித்த கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும், அவை கிடைக்கும்போது புதுப்பிப்புகள் வழங்கப்படும் என்றும் ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.





