இலங்கை – கடவுச்சீட்டு தாமதம் மற்றும் உடனடியாக பெற்றுக்கொள்ளும் முறை தொடர்பில் நாடாளுமன்றத்தில் விளக்கம்!
கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கு ஆன்லைன் முறை மூலம் ஒரு திகதி முன்பதிவு செய்யலாம் என்றும், அந்தத் தேதியில் வந்து அதே நாளில் கடவுச்சீட்டைப் பெற முடியும் என்றும் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
உதாரணத்திற்கு இன்று (23.01) ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு ஜூன் 27 ஆம் திகதி கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் பேசிய பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, வெளிநாடுகளுக்கு செல்ல அவசரமாக கடவுச்சீட்டுகள் தேவைப்படுபவர்களுக்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழு விண்ணப்பதாரரின் அவசரத் தேவையை உறுதிசெய்து அதே நாளில் வெளிநாட்டு பாஸ்போர்ட்டை வழங்கும். “உரிமம் பெறுவதற்கான நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.