ஒரு மில்லிமீட்டர் அளவு மீறினாலும் போர் வெடிக்கும் : வடகொரியா எச்சரிக்கை!
வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன், தனது நாட்டின் எல்லையில் ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான எல்லையை தென்கொரியர்கள் மீறினால், அது போருக்கான ஆத்திரமூட்டலாகக் கருதப்படும் என்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரியா குடியரசு நமது பிராந்திய நிலம், காற்று மற்றும் நீர்நிலைகளில் 0.001 மில்லிமீட்டர் அளவு கூட மீறினால், அது போர் ஆத்திரமூட்டலாக கருதப்படும்” எனக் கூறியுள்ளார்.
நீண்டகாலமாக வடகொரியாவிற்கும், தென்கொரியாவிற்கும் இடையில் போர் பதற்றம் நீடித்து வருகின்றது.
சமீபத்தில் தென்கொரிய கடல்பகுதியில் வடகொரியா துப்பாக்கிச்சூடு நடத்திய பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





